விளையாட்டு

இந்தியன் கிராண்ட் ப்ரீ: சிந்துவை வீழ்த்தி சாய்னா சாம்பியன்

செய்திப்பிரிவு

இந்தியன் கிராண்ட் ப்ரீ பேட்மிட்டன் இறுதிச் சுற்றில், சக நாட்டு வீராங்கனை பி.வி.சிந்துவை வீழ்த்தி, இந்தியாவின் முன்னணி வீராங்கனை சாய்னா நேவால் சாம்பியன் பட்டம் வென்றார்.

லக்னோவின் இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் இறுதிச் சுற்றில், சிந்துவை 21-14, 21-17 என்ற நேர் செட்களில் சாய்னா எளிதில் வீழ்த்தினார்.

கடந்த 15 மாதங்களாக சர்வதேச போட்டிகளில் சாம்பியன் பட்டத்தை வெல்ல முடியாத சாய்னாவுக்கு, சையத் மோடி சர்வதேச இந்தியன் கிராண்ட் ப்ரீ பேட்மிட்டனில் பட்டம் சூடியது ஆறுதலைத் தந்துள்ளது.

இந்த வெற்றி குறித்து சாய்னா கூறும்போது, "இது உணர்வுப்பூர்மான தருணம். எனக்கு கிடைத்த ரசிகர்களின் ஆதரவுக்கு நன்றி. லக்னோ எனக்கு மிகவும் பிடித்த நகரம். இங்குதான் 2009-ல் எனது முதல் பட்டத்தை வென்றேன். நீண்ட நாள்களுக்குப் பிறகு மீண்டும் சாம்பியன் பட்டத்தை வெல்வது மகிழ்ச்சி அளிக்கிறது.

சிந்துவும் மிகச் சிறப்பாக விளையாடினார். அவருடன் இறுதிச் சுற்றில் விளையாடியது நல்ல அனுபவம்" என்றார் சாய்னா.

இந்த வெற்றியின் மூலம் 7000 புள்ளிகளைப் பெறும் சாய்னா, உலக பேட்மிட்டன் தரவரிசையில் சற்றே ஏற்றம் காண்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT