மியாமி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் இறுதிச்சுற்றில் உலகின் முதல் நிலை வீரரான ஸ்பெயினின் ரஃபேல் நடாலும், 2-ம் நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சும் மோதுகின்றனர். அமெரிக்காவின் மியாமி நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியின் அரையிறுதியில் நடாலை எதிர்த்து விளையாடவிருந்த செக்.குடியரசின் தாமஸ் பெர்டிச் வயிற்றுக்கோளாறு காரணமாகவும், ஜோகோவிச்சை எதிர்த்து விளையாடவிருந்த ஜப்பானின் நிஷிகோரி தொடைப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக போட்டியிலிருந்து விலகினர். இதையடுத்து நடாலும், ஜோகோவிச்சும் அரையிறுதியில் விளையாடாமலேயே இறுதிச்சுற்றுக்கு முன்னேறினர்.