விளையாட்டு

டெஸ்ட் தரவரிசை: டாப் 10-ல் இரு இந்திய வீரர்கள்

செய்திப்பிரிவு

துபாய்

டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் முதல் 10 இடங்களில் இந்திய வீரர்கள் இருவர் இடம் பெற்றுள்ளனர். பேட்ஸ்மேன்கள் வரிசையில் இந்தியாவின் புஜாரா (777 புள்ளிகள்) 7-வது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டார். பந்து வீச்சாளர்கள் வரிசையில் இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் 757 புள்ளிகளுடன் 8-வது இடத்தில் உள்ளார். பிரக்யான் ஒஜா 13 வது இடத்திலும், ஜாகீர்கான் 16 வது இடத்திலும் உள்ளனர்.

பேட்டிங்கில் தென்னாப்பிரிக்க வீரர் ஹசிம் ஆம்லா (903 புள்ளிகள்) தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். சிவநாராயண் சந்தர்பால் (வெஸ்ட்இண்டீஸ்), டிவில்லியர்ஸ் (தென்ஆப்பிரிக்கா) ஆகியோர் முறையே 2,3-வது இடங்களில் உள்ளனர். பந்து வீச்சில் தென்னாப்பிரிக்காவின் ஸ்டெயின் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். பிலாண்டர் (தென்ஆப்பிரிக்கா), ஹெராத் (இலங்கை) ஆகியோர் முறையே 2,3-வது இடத்தில் உள்ளனர். ஆல்ரவுண்டர்கள் வரிசை யில் காலிஸ் (தென்ஆப்பிரிக்கா), ஷாகிப் அல் ஹசன் (வங்கதேசம்) ஆகியோர் முதல் இரு இடங்களில் உள்ளனர். ரவிச்சந்திரன் அஸ்வின் 3-வது இடம் பிடித்துள்ளார்.

ஐசிசி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட டெஸ்ட் தரவரிசைப்பட்டியலில் இந்த விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT