இந்திய ஒலிம்பிக் சங்க (ஐ.ஓ.ஏ.) நிர்வாகிகள் தேர்தல் டெல்லியில் இன்று நடைபெறுகிறது.
பிசிசிஐ தலைவர் சீனிவாசனின் சகோதரரும், உலக ஸ்குவாஷ் சம்மேளன தலைவருமான ராமச்சந்திரன் போட்டியின்றி தலைவராக தேர்வு செய்யப்படவுள்ளார். இந்திய கோ-கோ சம்மேளனத்தின் தலைவர் ராஜீவ் மேத்தா ஐஓஏவின் பொதுச் செயலராகவும், அகில இந்திய டென்னிஸ் சங்க தலைவர் அனில் கண்ணா பொருளாளராகவும் தேர்வு செய்யப்படவிருக்கிறார்கள்.
நிர்வாகிகள் தேர்தலில் சர்வதேச ஒலிம்பிக் கவுன்சிலின் (ஐஓசி) விதிமுறைகள் பின்பற்றப்பட வில்லை என்பது போன்ற விஷயங்களை சுட்டிக்காட்டி கடந்த டிசம்பரில் ஐஓஏ சஸ்பென்ட் செய்யப்பட்டது. ஐஓஏவுக்கு மறுதேர்தல் நடத்தப்படுவதன் மூலம் சஸ்பென்ட் விரைவில் நீக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.