முகமது அலியின் மறைவுக்கு விஜேந்தர் சிங், மேரி கோம் ஆகியோர் இரங்கல் தெரிவித் துள்ளனர். இது தொடர்பாக தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள விஜேந்தர் சிங், “முகமது அலி ஒரு மிகப்பெரிய ஜாம்பவான். அவருக்கு இறப்பே இல்லை. குத்துச்சண்டையில் அவர் செய்துள்ள சாதனைகளை யாரும் மறக்க முடியாது. குத்துச்சண்டை களத்துக்கு வெளியிலும் அவர் பல சேவைகளைச் செய்துள்ளார்” என்று கூறியுள்ளார்.
இந்திய குத்துச்சண்டை வீராங் கனையான மேரி கோம், “குத்துச் சண்டை உலகுக்கு முகமது அலியின் இழப்பு மிகப்பெரியது. சிறுவயதில் எனக்கு ஊக்கசக்தி யாக இருந்தவர் முகமது அலி. எனவே அவரது இழப்பு தனிப்பட்ட முறையில் எனக்கு பேரிழப்பாகும். அவர் என்றும் மக்கள் மனதில் வாழ்வார்” என்று கூறியுள்ளார்.
இந்திய குத்துச்சண்டை வீரரான சிவ தாபா, “குத்துச்சண்டை ஜாம்பவானான முகமது அலி இன்று உயிருடன் இல்லை என்பது கவலை அளிக்கும் விஷயம். அவரைப்போன்ற ஜாம்பவான்களுக்கு என்றும் மறைவு இல்லை. ரசிகர்களின் மனதில் அவர் என்றும் வாழ்ந்துகொண்டு இருப்பார்” என்று கூறியுள்ளார்.
முன்னாள் கிரிக்கெட் வீரர் அனில் கும்ப்ளே, துப்பாக்கி சுடும் வீரர் ராஜ்யவர்தன் சிங் ராதோர், ரோஹன் போபண்ணா, ஆகியோரும் முகமது அலியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.