விளையாட்டு

பிரெஞ்ச் ஓபன் கலப்பு இரட்டையரில் போபண்ணா ஜோடி சாம்பியன்

பிடிஐ

பிரெஞ்ச் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் போபண்ணா- கனடாவின் கப்ரியேலா தாப்ரோவ்ஸ்கி சாம்பியன் பட்டம் வென்றனர்.

போபண்ணா வெல்லும் முதல் கிராண்ட் ஸ்லாம் பட்டமாகும் இது. இதற்கு முன்னர் லியாண்டர் பயஸ். மகேஷ் பூபதி, சானியா மிர்சா ஆகியோர் கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றுள்ளனர்.

கலப்பு இரட்டையர் இறுதிப் போட்டியில் ஜெர்மனியின் லேனா குரோனிபெல்ட்- கொலம்பியாவின் ராபர்ட் ஃபரா ஜோடியை 2-6, 6-2, 12-10 என்ற செட் கணக்கில் போராடி வெற்றி கண்டு சாம்பியன் பட்டம் வென்றனர்.

இதற்கு முன்னர் 2010-ம் ஆண்டில் யு.எஸ். ஓபன் கிராண்ட் ஸ்லாம் ஆடவர் இரட்டையர் போட்டியில் பாகிஸ்தான் வீரர் ஐசம் உல் ஹக் குரேஷியுடன் ஜோடி சேர்ந்து ஆடிய போபண்ணா இறுதிப் போட்டியில் அபார இரட்டையர்களான அமெரிக்காவின் பிரையன் சகோதரர்களிடம் தோற்றார்.

தற்போது போபண்ணாவின் கிராண்ட் ஸ்லாம் சாம்பியன் பட்டம் வெல்லும் கனவு நிறைவேறியுள்ளது.

SCROLL FOR NEXT