ஆஸ்திரேலியா – இங்கிலாந்து இடையிலான முதல் ஒருநாள் தொடரில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஜான்சனுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
ஆஷஸ் டெஸ்ட் தொடரில் மிட்செல் ஜான்சன் 37 விக்கெட்டுகள் வீழ்த்தி தொடர்நாயகன் விருது பெற்றார். இந்நிலையில் முதல் ஒருநாள் தொடரில் இருந்து அவருக்கு ஓய்வு அளிக்கப்படுவதாக ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் டேரன் லேமன் நேற்று தெரிவித்தார்.
ஏற்கெனவே டெஸ்ட் தொடரில் இங்கிலாந்தை முழுமையாகத் தோற்கடித்துள்ளோம். இனி ஒருநாள் தொடரிலும் தோற்கடிக்கும் முனைப்புடன் விளையாடுவோம். ஒரு வெற்றி கூட இல்லாமல் வெறும் கையுடன்தான் இங்கிலாந்து நாடு திரும்பும் என்றும் லேமன் கூறினார்.
ஆஸ்திரேலியா – இங்கிலாந்து இடையிலான ஒருநாள் தொடர் வரும் 12-ம் தேதி மெல்போர்னில் தொடங்குகிறது. இந்த தொடக்க போட்டியில் மிட்செல் ஜான்சன் பங்கேற்க மாட்டார். அதே நேரத்தில் சிட்னியில் 17-ம் தேதி நடைபெறும் 2-வது ஒருநாள் கிரிக்கெட்டில் அவர் களம் இறங்குவார்.