விளையாட்டு

இங்கிலாந்துக்கு எதிரான கிரிக்கெட்டில் இந்தியாவின் வெற்றிக்கு தொடக்க ஜோடியே காரணம்: கேப்டன் மிதாலி ராஜ் கருத்து

பிடிஐ

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்றதற்கு இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களே காரணம் என்று கேப்டன் மிதாலி ராஜ் கூறியுள்ளார்.

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் போட்டியில் இங்கிலாந்துடன் இந்திய அணி மோதியது. இதில் முதலில் ஆடிய இந்திய அணி 50 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 281 ரன்களைக் குவித்தது. இந்திய அணியில் மந்தனா 90, பூனம் ராவத் 86, மிதாலி ராஜ் 71 ரன்களைச் சேர்த்தனர். இதைத்தொடர்ந்து ஆடவந்த இங்கிலாந்து அணி 47.3 ஓவர்களில் 246 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் ஃபிரான் வில்சன் அதிகபட்சமாக 81 ரன்களைச் சேர்த்தார். அவருக்கு அடுத்தபடியாக நைட் 46, ப்ரண்ட் 24 ரன்களை எடுத்தனர்.

இந்திய அணியில் தீப்தி சர்மா சிறப்பாக பந்துவீசினார். 8.3 ஓவர்களை வீசிய அவர், 47 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தினார். ஷிகா பாண்டே 2 விக்கெட்களையும், பூனம் யாதவ் 1 விக்கெட்டையும் எடுத்தனர். இந்தியாவுக்காக 72 பந்துகளில் 90 ரன்களைக் குவித்த மந்தனா ஆட்ட நாயகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். மகளிர் கிரிக்கெட்டில் கடந்த 5 ஆண்டுகளில் இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி பெற்ற முதல் வெற்றி இதுவாகும். இந்தப் போட்டி குறித்து இந்திய கிரிக் கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:

ஆட்டத்தின் முதல் 25 ஓவர்களில் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக ஆடுகளம் இருக்கும் என்பதால்தான் இங்கிலாந்து அணி முதலில் பீல்டிங்கை தேர்ந்தெடுத்தது. இதன் மூலம் இந்திய அணியின் விக்கெட்களை வேகமாக வீழ்த்த முடியும் என்று அவர்கள் கருதினர். ஆனால் நம் வீராங்கனைகள் சிறப்பாக பேட்டிங் செய்து இங்கிலாந்தின் எதிர்பார்ப்பை பொய்யாக்கினர்.

இப்போட்டியில் இந்திய தொடக்க ஆட்டக்காரர்கள் இருவ ரும் மிகச் சிறப்பாக ஆடினர். பாதிக்கும் மேற்பட்ட ஓவர்களை அவர்களே ஆடினர். இந்திய அணியின் வெற்றிக்கு தொடக்க ஆட்டக்காரர்களின் ஆட்டமே முக்கிய காரணம். இவர்கள் அமைத்துக் கொடுத்த அடித்தளத் தால்தான் இந்திய அணி 281 ரன் களைக் குவித்தது. மகளிர் கிரிக் கெட்டைப் பொறுத்தவரை 250 ரன் களுக்கு மேல் குவித்தாலே எளிதில் வெற்றிபெற முடியும். இங்கிலாந் துக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றாலும் இந்திய அணியின் பீல்டிங் சற்று மோசமாகவே இருந் தது. இந்தத் துறையில் நாங்கள் இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டும்.

SCROLL FOR NEXT