சர்வதேச கால்பந்து அணிகளின் தரவரிசை பட்டியலை பிபா வெளியிட்டுள்ளது. இதில் இந்திய அணி 129-வது இடத்துக்கு முன்னேறி உள்ளது. கடந்த இரண்டு ஆண்டு களில் இந்திய அணி தரவரிசை பட்டியலில் சீரான முன்னேற்றம் கண்டு 40 இடங்களுக்கு மேல் முன்னேற்றம் கண்டுள்ளது.
கடந்த ஆண்டில் இந்திய அணி சர்வதேச அளவில் கடைசியாக மோதிய 11 போட்டிகளில் 9 வெற்றி களை பெற்றிருந்தது. கடந்த செப்டம்பர் மாதம் தரவரிசையில் 114-வது இடத்தில் உள்ள புயர்டோ ரிகோ அணிக்கு எதிராக மும்பையில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தது சிறப்பம்சமாக இருந்தது.
இந்திய அணியின் பயிற்சியாளர் ஸ்டீவன் கான்ஸ்டான்டின் கூறும்போது, “கடைசியாக இந்திய அணி கடந்த 2005-ம் ஆண்டு தரவரிசை பட்டியலில் 127-வது இடத்தை பிடித்திருந்தது. அதன் பிறகு தற்போது சிறந்த இடத்தை கைப்பற்றி உள்ளது. ஒட்டுமொத்த அணியின் உழைப்பின் காரணமாக இது சாத்தியமாகி உள்ளது’’ என்றார்.
கடந்த 2015 பிப்ரவரி மாதம் கான்ஸ்டான்டின் 2-வது முறையாக பயிற்சியாளராக பொறுப்பேற்ற போது இந்திய அணி 171-வது இடத்தில் இருந்தது. அடுத்த சில மாதங்களில் 173-வது இடத் துக்கு தள்ளப்பட்டது. கான்ஸ்டான் டின் பயிற்சியாளரான பிறகு இந்தியா தனது முதல் ஆட்டத்தில் நேபா ளத்தை 2-0 என வென்றிருந்தது. 2016-ம் ஆண்டை 135-வது இடத் துடன் இந்திய அணி நிறைவு செய் திருந்தது. தற்போது 6 இடங்களிள் முன்னேற்றம் கண்டுள்ளது.