விளையாட்டு

மல்யுத்த பயிற்சியாளர் சஸ்பெண்ட்

செய்திப்பிரிவு

பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான மல்யுத்த பயிற்சியாள் சத்வீர் சிங்கை சஸ்பெண்ட் செய்துள்ளது இந்திய விளையாட்டு ஆணையம் (சாய்). இவர் ஹரியாணா மாநிலம் கிஸ்ஸாரில் உள்ள சாய் பயிற்சி மையத்தில் தலைமை மல்யுத்த பயிற்சியாளராக இருந்தார்.

அவரிடம் மல்யுத்த பயிற்சி மேற்கொண்ட 14 முதல் 18 வயதுடைய மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக கடந்த 1-ம் தேதி பாதிக்கப்பட்ட மாணவிகள் சார்பில் போலீஸில் புகார் அளிக்கப்பட்டது.

இதன் அடிப்படையில் சத்வீர் சிங் மீது சிறார்களுக்கு எதிரான குற்றச் செயல் தடுப்புச் சட்டம் உள்பட இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக சாய் தனிப்பட்ட முறையில் விசாரணை நடத்தவுள்ளது. எந்தவிதமான விசாரணைக்கும் தான் தயாராக இருப்பதாக சத்வீர் சிங் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT