விளையாட்டு

புனே அணிக்கு தோனி கேப்டன் இல்லை: சேவாக் ‘மகிழ்ச்சி’

இரா.முத்துக்குமார்

புனே அணிக்கு இம்முறை தோனி கேப்டன் இல்லை என்பதற்கு நகைச்சுவையாக சேவாக் கூறும்போது தான் மகிழ்ச்சியடைவதாக தெரிவித்துள்ளார்.

அதாவது இந்த முறை தன் அணி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, தோனி கேப்டனாக இல்லாத புனே அணியை வீழ்த்த முடியும் என்கிற நகைச்சுவை தொனியில் சேவாக் அவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து சேவாக் ஸீ நியூஸ் சேனலில் கூறியபோது, “தோனி கேப்டன் இல்லை என்பது எனக்கு மகிழ்ச்சி, ஏனெனில் என் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி இந்த புனே அணியை தோற்கடிக்க முடியும்” என்றார்.

புதிய கேப்டனாக ஆஸி. கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் நியமிக்கப்பட்டது குறித்து சேவாக் கூறும்போது, “அது அந்த அணி நிர்வாகத்தின் முடிவு. ஆனால் இந்தியாவுக்குக் கிடைத்த கேப்டன்களிலேயே ஆகச்சிறந்தவர் தோனிதான்” என்றார்.

SCROLL FOR NEXT