இந்திய-தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் டிசம்பர் 5-ம் தேதி முதல் தொடங்குகிறது.
டிசம்பர் 2-ம் தேதி தென் ஆப்பிரிக்கா செல்லும் இந்திய அணி, டிசம்பர் 5, 8, 11 ஆகிய தேதிகளில் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இந்த 3 போட்டிகளும் முறையே ஜோகன்னஸ்பர்க், டர்பன், செஞ்சுரியன் ஆகிய நகரங்களில் நடைபெறுகின்றன. அதைத் தொடர்ந்து டிசம்பர் 14, 15 ஆகிய தேதிகளில் இரண்டு நாள் பயிற்சி போட்டி பெனானி நகரில் நடைபெறுகிறது.
அதன்பிறகு இரு டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி டிசம்பர் 18 முதல் 22 வரை ஜோகன்னஸ்பர்க்கிலும், 2-வது டெஸ்ட் போட்டி டிசம்பர் 26 முதல் 30 வரை டர்பனிலும் நடைபெறுகின்றன.