ஐபிஎல் சாம்பியன்களான மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் மனவலிமை குறித்து அவர் மனைவி ரித்திகா பெருமையுடன் கூறியுள்ளார்.
புனே அணியை 1 ரன் வித்தியாசத்தில் பரபரப்பான போட்டியில் மும்பை வீழ்த்தி 3-வது முறையாக கோப்பையை வென்றது. 3 முறை கோப்பை வென்ற ஒரே ஐபிஎல் கேப்டனானார் ரோஹித் சர்மா, மேலும் டெக்கான் சார்ஜர்ஸ் அணி கோப்பியை வென்ற போது அந்த அணியில் இருந்த வீரர் என்ற முறையில் 4 முறை ஐபிஎல் சாம்பியன் அணியுடன் ரோஹித் இருந்துள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட்டுக்கு முன்னதாக காயமடைந்து அதிலிருந்து மீள மிகவும் சிரமப்பட்டார் ரோஹித் சர்மா.
இதனைக் குறிப்பிட்டு ரோஹித்தின் மனைவி ரித்திகா சமூக வலைத்தளத்தில் கூறும்போது, “வாழ்த்துக்கள். உங்கள் ஐபிஎல் அணி இன்னொரு முறை கோப்பையை வென்றதற்காக அல்ல. கடந்த 6 மாத கடினமான காலக்கட்டத்தில் நீங்கள் அடைந்த வேதனைகளை நான் அறிவேன். அதிலிருந்து மீண்டு முன்னெப்போதையும் விட உறுதியாக நின்று வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள்.
நான் அறிந்தவரையில் மனவலிமை உடைய வீரர் நீங்கள்தான். உங்களை எண்ணி மிகவும் பெருமைப் படுகிறேன்” என்று கூறியுள்ளார்.