தாய்லாந்து கிராண்ட் பிரிக்ஸ் கோல்டு பாட்மிண்டன் தொடரில் இந்திய வீரர் சாய் பிரணீத் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். அதேவேளையில் மகளிர் பிரிவில் சாய்னா நெவால் அரை இறுதியில் தோல்வியடைந்தார்.
பாங்காக் நகரில் நடைபெற்று வரும் இந்த தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு அரை இறுதியில் போட்டி தரவரிசையில் 3-ம் நிலை வீரரான இந்தியாவின் சாய் பிரணீத் 21-11, 21-15 என்ற நேர் செட்டில் தாய்லாந்தின் பன்னவித் தோங்னாமை வீழ்த்தினார்.
லண்டன் ஒலிம்பிக்கில் வெண் கலப் பதக்கம் வென்ற சாய்னா தனது அரை இறுதியில் 19-21, 18-21 என்ற நேர் செட்டில் தாய்லாந்தின் புசானன் ஆங்பம்ரங்பானிடம் தோல்வியடைந்தார். இந்த ஆட்டம் 53 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது.