விளையாட்டு

சாதனை நாயகன் சச்சின் ஓய்வு: தொடரை வென்றது இந்தியா

செய்திப்பிரிவு

இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான 2 டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரை இந்தியா 2 - 0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியை இந்தியா ஒரு இன்னிங்ஸ் மற்றும் 126 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது.

ஆட்டநாயகன் விருது பிரயன் ஓஜாவுக்கும் தொடர் நாயகன் பட்டம் ரோஹித் ஷர்மாவுக்கும் வழங்கப்பட்டது.

கண்ணீர் மல்க விடை பெற்றார் சச்சின்:

200வது டெஸ்டில் விளையாடிய மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து கண்ணீர் மல்க விடை பெற்றார்.

கடைசி டெஸ்ட் போட்டியில் 74 ரன்கள் எடுத்தார் சச்சின். இதுவரை அவர் விளையாடியுள்ள 200 டெஸ்ட் போட்டிகளில் 52 சதம், 68 அரை சதம், 15,921 ரன்கள் குவித்துள்ளார்.

தொடரை கைப்பற்றியது. இந்தியா :

இந்தியா வந்துள்ள மேற்கு இந்தியத் தீவுகள் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. கோல்கட்டா டெஸ்டில் வென்ற இந்திய அணி 1-0 என, தொடரில் முன்னிலை வகித்தது.

இரண்டாவது டெஸ்ட் போட்டி மும்பையில் நடந்தது. முதல் இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் அணி 182, இந்தியா 495 ரன்கள் எடுத்தன. வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாவது இன்னிங்சில் 187 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.

சிறப்பாக விளையாடிய இந்திய அணி, இன்னிங்ஸ் மற்றும் 126 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

SCROLL FOR NEXT