விளையாட்டு

உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி: கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடி தங்கம் வென்றது

பிடிஐ

ஐஎஸ்எஸ்எப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதலில் இந்திய ஜோடி தங்கப் பதக்கம் வென்றது.

டெல்லியில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் கடந்த இரு நாட்களில் இந்தியாவுக்கு பெரிய அளவிலான பதக்கங்கள் எதுவும் கிடைக்கவில்லை. இந்நிலையில் நேற்று நடைபெற்ற 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியா தங்கப் பதக்கம் வென்றது.

இந்தியாவின் ஹீனா சித்து, ஜித்து ராய் ஜோடி 5-3 என்ற கணக்கில் ஜப்பானின் யுகாரி ஹோனிஷி, டோமோயுகி மட்சுடா ஜோடியை வீழ்த்தி தங்கப் பதக் கத்தை கைப்பற்றியது. சுலோவேனி யாவின் யங்பபிபூன், கெவின் வென்டா ஜோடி 3-வது இடம் பிடித்தது.

கலப்பு இரட்டையர் பிரிவை 2020-ம் ஆண்டு டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக்கில் சேர்க்கவும் ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் முன்னோட்டமாகவே தற்போது உலகக் கோப்பையில் முதன்முறை யாக கலப்பு இரட்டையர் பிரிவு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தப் போட்டியை அதிகாரப் பூர்வ போட்டியாக அறிவிக்க சர்வதேச துப்பாக்கி சுடுதல் கூட்டமைப்பு (ஐஎஸ்எஸ்எப்) செயற்குழுவானது சர்வதேச ஒலிம்பிக் கமிட்டிக்கு பரிந்துரை செய்துள்ளது. இதற்கு அனுமதி கிடைக்கும் பட்சத்தில் ஹீனா சித்து, ஜித்து ராய் ஜோடியின் பதக்கம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

வெற்றி குறித்து ஹீனா சித்து கூறும்போது, “போட்டி சுவாரசிய மாக இருந்தது. தற்போதுதான் கலப்பு இரட்டையர் பிரிவு கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் கருத் துகள் வித்தியாசமாக உள்ளன. இது சீராகுவதற்கு சிறிது காலம் தேவைப்படும். ஆனால் இந்த பிரிவு ஒலிம்பிக் மற்றும் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் சேர்க் கப்படக்கூடும் என்பதால் நாம் அதற் காக சிறந்த முறையில் தயாராக வேண்டும்’’ என்றார்.

ஜித்து ராய் கூறும்போது, “கலப்பு இரட்டையர் பிரிவில் சிறப் பாக செயல்படுவதற்கான வழிகளை கண்டறிந்து வருகிறேன். ஒருங்கி ணைந்து செயல்படுவதில் சற்று சிரமம் உள்ளது. ஆனால் விதிமுறைகள் தெளிவுபடுத்தப் படும்போது எங்களால் சிறப்பாக செயல்பட முடியும்’’ என்றார்.

SCROLL FOR NEXT