விளையாட்டு

‘தி இந்து’ ஸ்போர்ட் ஸ்டார் முன்னாள் ஆசிரியர் நிர்மல் சேகர் காலமானார்

செய்திப்பிரிவு

‘தி இந்து’ நாளிதழின் முன்னாள் விளையாட்டு செய்தி ஆசிரியர் நிர்மல் சேகர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் நேற்று முன்தினம் இரவு காலமானார். அவருக்கு வயது 60.

கடந்த 1980-ம் ஆண்டு ‘தி இந்து’ நாளிதழில் பணியில் சேர்ந்த நிர்மல் 2015, செப்டம்பர் 30-ம் தேதி ஓய்வு பெறும் வரை சுமார் 30 ஆண்டு காலம் திறம்பட பணி புரிந்தார். இந்தியாவின் விளையாட்டு எழுத்தாளர்களில் ஒருவராகவும் தன்னை உயர்த்தி கொண்டவர். 2003-ல்

‘தி இந்து’வின் விளையாட்டு செய்தி ஆசிரியராக பதவியேற்று, 2012 தொடக்கத்தில் ‘ஸ்போர்ட் ஸ்டார்’ இதழுக்கு தனிப் பொறுப்பும் வகித்தார். அமெரிக்காவில் பட்டப்படிப்பு முடித்த நிர்மல், சென்னையில் உள்ள இதழியல் ஏசியன் கல்லூரியின் ஆசிரியராகவும் பணியாற்றியவர்.

விம்பிள்டன், ஆஸ்திரேலிய ஓபன், டேவிஸ் கோப்பை போன்ற மிகப் பெரிய டென்னிஸ் விளை யாட்டுப் போட்டிகளை களத்துக்கு சென்று பார்வையிட்டு விரிவாக செய்தி வழங்கியிருக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன் விளை யாட்டு செய்திகளை தொகுத்து வழங்குவது குறித்து பேட்டியளித்த நிர்மல், ‘‘வெறும் விளையாட்டுடன் எனது வாழ்க்கையை கட்டுப் படுத்திக் கொள்ள விரும்ப வில்லை. விளையாட்டை கடந்து அதில் இருக்கும் உளவியல் விவகா ரங்கள் மற்றும் விளையாட்டுக் கான உடல் தகுதி ஆகியவற்றையும் விரிவாக புரிந்து கொள்ள முயற்சித்து வருகிறேன்’’ என்றார்.

பணியில் இருந்து ஓய்வு பெற்றா லும் கூட ‘தி இந்து’ நாளிதழுக்கு தொடர்ந்து கட்டுரைகளை எழுதி வந்தார். கடைசியாக கடந்த மாதம் 28-ம் தேதி அவர் கட்டுரை எழுதியி ருந்தார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் பிராட்மேன் பற்றி அந்த கட்டுரையில்,“எதுவும் எப்போதும் அப்படியே நீடித்து நிற்காது. விதிவிலக்காக பிராட்மேனின் டெஸ்ட் போட்டி சராசரி மட்டும் அப்படியே நீடித்து நிற்கிறது. இதில் வேடிக்கை என்னவெனில் விளையாட்டில் விதிவிலக்கே கிடையாது என்பதுதான்’’ என குறிப்பிட்டிருந்தார். தனது தாயார், மனைவி, மகன் மற்றும் மகளுடன் நிர்மல் வாழ்ந்து வந்தார். அவரது இறுதி சடங்கு நேற்று மதியம் நடைபெற்றது.

SCROLL FOR NEXT