இந்திய ஆயுள் காப்பீட்டு (எல்ஐசி) நிறுவனத்தின் விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பாக, தென்மண்டல எல்ஐசி அலுவலகம் பொதுத்துறை நிறுவனங்களுக்கான அகில இந்திய வாலிபால் போட்டியை சென்னையில் நடத்துகிறது. ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று (4-ம் தேதி) தொடங்கும் இப்போட்டி வரும் 7-ம் தேதி வரை நடைபெறுகிறது.
இப்போட்டியில் முன்னணி பொதுத்துறை நிறுவனங்களான என்எல்சி, பிஎஸ்என்எல், பிஎச்இஎல், எல்ஐசி, கோல் இந்தியா மற்றும் ஆயில் இந்தியா உள்ளிட்ட நிறுவனங்கள் பங்கேற்கின்றன. இப்போட்டியை, எல்ஐசி மண்டல மேலாளர் டி.சித்தார்த்தன் மற்றும் மனிதவள மேம்பாட்டுத் துறை செயல் இயக்குநர் ராஜ்குமார் ஆகியோர் தொடங்கி வைக்கிறார்கள்