விளையாட்டு

ரோகன் போபண்ணா ஜோடி வெளியேற்றம்

பிடிஐ

அமெரிக்காவின் இந்தியன் வெல்ஸ் நகரில் ஏடிபி இந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, உருகுவேயின் பேப்லோ குயவாஸ் ஜோடி, செர்பி யாவின் ஜோகோவிச், விக்டர் டிராய்கி ஜோடியை எதிர்த்து விளையாடியது.

இதில் ஜோகோவிச் ஜோடி 6-2, 3-6,10-7 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டம் ஒரு மணி நேரம் 6 நிமிடங்கள் நடைபெற்றது. இந்த சீசனில் போபண்ணா, குயவாஸூடன் இணைந்து இதுவரை 3 தொடர் களை சந்தித்துள்ளார். ஆனால் இந்த ஜோடி ஒரு ஆட்டத்தில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியும் ஆஸ்திரேலிய ஓபனில் முதல் சுற்றில் கிடைத்ததுதான். ஆனால் அதே வேளையில் போபண்ணா மற்ற ஜோடிகளுடன் சிறப்பாக செயல்பட் டுள்ளார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஜீவன் நெடுஞ் செழியனுடன் இணைந்து சென்னை ஓபனில் பட்டம் வென்றார். கடந்த வாரம் நடைபெற்ற துபை போட்டியில் போலந்தின் மார்சின் மட்கோவ்ஸ்கியுடன் இணைந்து 2-வது இடம் பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT