விளையாட்டு

தர்மசாலா டெஸ்ட் வெற்றி: இந்திய அணி சரித்திர சாதனை

செய்திப்பிரிவு

அனைத்து நாடுகளுடனான கடைசி டெஸ்ட் தொடர்களில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது இந்திய அணி. ஆஸ்திரேலியா, வங்கதேசம், இங்கிலாந்து, நியூஸிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள், தென் ஆப்பிரிக்கா, இலங்கை, பாகிஸ்தான், ஜிம்பாப்வே ஆகிய நாடுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர்களை வென்றுள்ளது.

இதற்கு முன்னர் இந்த சாதனையை ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மட்டுமே நிகழ்த்தி உள்ளன. தற்போது இந்தியாவும் அந்த அணிகளுடன் இணைந்துள்ளது.

நம்பமுடியாத வெற்றி

வெற்றி குறித்து விராட் கோலி கூறும்போது,

“இந்த வெற்றியை நம்ப முடியவில்லை. இதுவரை எங்களது சிறந்த தொடர் வெற்றி இதுதான். இங்கிலாந்து தொடர் தீவிரமாக இருந்தது என்று நினைத்தேன், ஆனால் ஆஸ்திரேலியா எங்களுக்கு சவால் அளித்த விதம் அருமை. ஆனால் நம் வீரர்களும் தொடர்ந்து வீழ்ச்சியிலிருந்து மீண்டு எழுச்சி பெற்றனர்’’ என்றார்.

உமேஷ் யாதவ் அபாரம்

ஸ்டீவ் ஸ்மித் கூறும்போது,

“பாராட்டுக்கள் இந்திய அணி யையே சேரும். உமேஷ் யாதவ் அபாரமாக வீசினார். தொடக்கத்தில் தொடரை நாங்கள் 4-0 என இழப்போம் என கணித்தனர். ஆனால் நாங்கள் சரிசமமாக விளையாடியதில் மகிழ்ச்சி. சிலவேளை களில் நான் என் உணர்வுகளை கட்டுப்படுத்தாமல் நழுவ விடு கிறேன். அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்’’ என்றார்.

பிசிசிஐ ரூ.50 லட்சம் பரிசு

டெஸ்ட் தொடரை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு பிசிசிஐ பரிசு தொகையை அறிவித்துள்ளது. இந்திய அணியில் உள்ள ஒவ்வொரு வீரர்களுக்கும் தலா ரூ.50 லட்சம் பரிசு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT