விளையாட்டு

டி.என்.சி.ஏ. லீக்: விஜய் சிசி 147-க்கு ஆல்அவுட்

செய்திப்பிரிவு

தமிழ்நாடு கிரிக்கெட் சங்க (டிஎன்சிஏ) முதல் டிவிசன் லீக் கிரிக்கெட் போட்டியில் ஜாலி ரோவர்ஸ் சிசிக்கு எதிரான இறுதிச்சுற்றில் விஜய் சிசி அணி 75.5 ஓவர்களில் 147 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது.

சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கிய இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த விஜய் சிசி அணியில் அதிகபட்சமாக அபராஜித் 36 ரன்கள் எடுத்தார். விக்னேஷ் 22, தினேஷ் கார்த்திக் 17, பிரசன்னா 17, பாலாஜி 14, பத்ரிநாத் 11 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்க, விஜய் சிசியின் முதல் இன்னிங்ஸ் 75.5 ஓவர்களில் 147 ரன்களோடு முடிவுக்கு வந்தது.

ஜாலி ரோவர்ஸ் தரப்பில் ஜேசுராஜ் 29 ரன்களைக் கொடுத்து 3 விக்கெட்டுகளையும், பிரபு 57 ரன்களைக் கொடுத்து 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதையடுத்து பேட் செய்த ஜாலி ரோவர்ஸ் அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 10 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 33 ரன்கள் எடுத்துள்ளது. கோபிநாத் 22 ரன்களுடனும், பிரபு ரன் ஏதுமின்றியும் களத்தில் உள்ளனர்.

SCROLL FOR NEXT