விளையாட்டு

சாம்பியன்ஸ் டிராபிக்கு மோர்கன் தலைமையில் வலுவான இங்கிலாந்து அணி

இரா.முத்துக்குமார்

சாம்பியன்ஸ் டிராபி மினி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு மோர்கன் தலைமையிலான 15 வீர்ர்கள் கொண்ட வலுவான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

தன் சொந்த மண்ணில் ஆடுவதால் இங்கிலாந்து கோப்பையை வெல்லும் முனைப்புடன் வலுவான அணியைத் தேர்வு செய்துள்ளது.

வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட் சேர்க்கப்பட்டுள்ளதால் ஸ்டீவன் ஃபின்னிற்கு இடம் கிடைக்கவில்லை. அதே போல் டேவிட் வில்லே அணிக்குத் திரும்பியுள்ளார்.

சாம்பியன்ஸ் டிராபிக்கு தேர்வு செய்யப்பட்ட அதே அணிதான் மே மாதத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 3 ஒருநாள் போட்டிகளில் ஆடுகிறது.

இங்கிலாந்து அணி வருமாறு:

இயன் மோர்கன் (கேப்டன்), மொயின் அலி, ஜானி பேர்ஸ்டோ, ஜேக் பால், சாம் பில்லிங்ஸ், ஜோஸ் பட்லர், அலெக்ஸ் ஹேல்ஸ், லியாம் பிளங்கெட், அடில் ரஷீத், ஜோ ரூட், ஜேசன் ராய், பென் ஸ்டோக்ஸ், டேவிட் வில்லே, கிறிஸ் வோக்ஸ், மார்க் உட்.

SCROLL FOR NEXT