இங்கிலாந்தில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி 50 ஓவர் சர்வதேச கிரிக்கெட் தொடருக்கான அணியை ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.
இந்த அணியில் மிட்செல் ஸ்டார்க், பேட்டின்சன், மோய்சஸ் ஹெண்ட்ரிக்ஸ் ஆகியோர் மீண்டும் அழைக்கப்பட்டுள்ளனர்.
உஸ்மான் கவாஜா, ஹேண்ட்ஸ்கம்ப், ஜார்ஜ் பெய்லி, கேமரூன் ஒயிட் ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. குறிப்பிடத்தகுந்த விலக்கல் யாரெனில் வில்லியம் பாக்னர் என்பது குறிப்பிடத்தக்கது. 2011-லிருந்து பாக்னர் இல்லாமல் ஐசிசி கிரிக்கெட் தொடர்களுக்கு ஆஸ்திரேலியா பங்கேற்றதில்லை.
மார்கஸ் ஸ்டாய்னிஸ், ஹேஸ்டிங்ஸ் ஆகியோருக்கும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு தொடக்க வீரராகக் களமிறங்கி காட்டடி அடித்த கிறிஸ் லின் அணியில் இடம்பெற்றுள்ளார், காயத்திலிருந்து முழுதும் குணமடைந்து விட்டால் இவர் நிச்சயம் களமிறங்குவார்.
ஆஸ்திரேலிய அணி விவரம்:
ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), டேவிட் வார்னர், பாட் கமின்ஸ், ஏரோன் பிஞ்ச், ஜான் ஹேஸ்டிங்ஸ், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், மோய்சஸ் ஹென்ரிக்ஸ், கிறிஸ் லின், கிளென் மேக்ஸ்வெல், ஜேம்ஸ் பேட்டின்சன், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டாய்னிஸ், மேத்யூ வேட், ஆடம் ஸாம்ப்பா.