விளையாட்டு

டீன் எல்கர் சதம் விளாசல்

ஏஎஃப்பி

நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க வீரர் டீன் எல்கர் சதம் அடித்தார்.

டுனிடின் நகரில் நேற்று தொடங்கிய இந்த டெஸ்ட்டில் தென் ஆப்பிரிக்கா முதலில் பேட் செய்த நிலையில் ஸ்டீபன் குக் 3, ஹசிம் ஆம்லா 1, டும்னி 1 ரன்களில் வெளியேற 22 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்தது.

இதையடுத்து தொடக்க வீரரான டீன் எல்கருடன் இணைந்த கேப்டன் டு பிளெஸ்ஸிஸ் பார்ட்னர்ஷிப்பை கட்டமைத்தார். அரை சதம் அடித்த நிலையில்118 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் பிளெஸ்ஸிஸ் 52 ரன்களில் நீஷாம் பந்தில் வெளியேறினார்.

இந்த ஜோடி 4-வது விக்கெட் டுக்கு 126 ரன்கள் எடுத்தது. இதை யடுத்து களமிறங்கிய டெம்பா பவுமா நிதானமாக விளையாட மறுமுனையில் சிறப்பாக விளையாடிய டீன் எல்கர் 197 பந்துகளில், 20 பவுண்டரிகளுடன் தனது 7-வது சதத்தை அடித்தார்.

முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 90 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 229 ரன்கள் எடுத்தது. டீன் எல்கர் 128, டெம்பா பவுமா 38 ரன்களுடன் களத்தில் இருந்தனர். நியூஸிலாந்து அணி தரப்பில் வாக்னர் 2 விக்கெட்கள் வீழ்த்தினார். முதல் நாளில் 30 ஓவர்கள் மெய்டன்களாக வீசப்பட்டன.

SCROLL FOR NEXT