பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய முன்னிலை ஆஃப் ஸ்பின்னர் நேதன் லயனை, இந்தியா ஏ-வின் ஆஃப் ஸ்பின்னர் கவுதம் பின்னி எடுத்தார், இதனால் வெறுப்படைந்த லயன் அவர் மீது சில வசைமொழிகளை ஏவினார்.
நேதன் லயன் பயிற்சி ஆட்டத்தில் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார், ஆனால் 162 ரன்களை விட்டுக் கொடுத்தார். இதில் ஞாயிறன்று ஷ்ரேயஸ் ஐயர் இரட்டைச் சதத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கும் போது, மறு முனையில் கே.கவுதம் லயனை பின்னி எடுத்தார். 6 ஓவர்களில் 57 ரன்கள் விளாசப்பட்டது.
கவுதம்-ஸ்ரேயஸ் ஐயர் கூட்டணி 138 ரன்களை 7-வது விக்கெட்டுக்காகச் சேர்த்த போது ரன் விகிதம் ஓவருக்கு 6.08. கவுதம் 68 பந்துகளில் 10 பவுண்டரிகள் 4 சிக்சர்கள் என்று 64 ரன்களை பவுண்டரியிலேயே குவித்தது நேதன் லயன் ஆத்திரத்தை அதிகப்படுத்தியது. காரணம் கே.கவுதமின் பேட்டிங் சராசரி 19.63 என்பதே.
மேலும் ஆஃப் ஸ்பின்னரான கவுதம் காயம் காரணமாக பந்து வீசவில்லை, ஆனால் பேட்டிங்கில் இறங்கி, அதுவும் குறிப்பாக தன்னை தாக்கியது நேதன் லயனை வெறுப்பேற்றியது.
மைதானத்தில் நடந்ததை ஸ்ரேயஸ் ஐயர் விவரித்த போது, “அவர் கவுதமை பற்றி பேசிக்கொண்டே இருந்தார், என்னிடம் ‘யார் இவர், யார் இந்த வீரர்?’ என்று கேட்டுக் கொண்டேயிருந்தார்.
பிற்பாடு பந்து வீசாமல் இருந்து காயம் போல் நடித்தாரா கவுதம் என்றும் லயன் என்னிடம் கேட்டார். நேதன் லயன் தன் பந்துகளை கவுதம் பின்னி எடுத்தது குறித்து வெறுப்படைந்ததையே இது காட்டுகிறது.
அதே போல் அசோக் டிண்டா, ஆஸி.வீரர் ஹேண்ட்ஸ்கோம்பிடம் என்ன கூறினார் என்றால், ‘ஏன் பின்னால் சென்று ஆடுகிறாய்? முன்னால் வந்து ஆடு’ என்று கூறினார்.
முதல் தர கிரிக்கெட்டிலேயே ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித் ‘ஸ்லெட்ஜிங்’ பரிந்துரைகள் பின்னடைவு கண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.