விளையாட்டு

தோனி பற்றிய விமர்சனத்தை மாற்றிக் கொண்ட புனே அணி உரிமையாளர்

செய்திப்பிரிவு

கடந்த ஐபிஎல் போட்டியில் புனே அணி சிறப்பாக ஆடவில்லை. அதனால் இந்த ஐபிஎல் போட்டியில் திறமையான இளம் வீரர் ஒருவரை அணிக்கு கேப்டனாக நியமிக்க முடிவெடுத்தோம். என்று புனே அணியின் கேப்டனாக இருந்த தோனியின் பதவி நீக்கம் குறித்து விளக்கம் தெரிவித்திருந்தார் புனே அணியின் உரிமையாளர்களில் ஒருவரான சஞ்சீவ் கோயங்கா.

மேலும் சஞ்சீவின் சகோதரரும் புனே அணியின் மற்றுமொரு உரிமையாளரான ஹர்ஷ் கோயங்கா,' 2017ஆம் ஆண்டுக்கான இந்த ஐபிஎல் சீசன் தொடங்கியது, முதல் இரு ஆட்டங்களில் தோனி சரியாக ரன் குவிக்காததால் புனே அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்ட ஸ்டீவ் ஸ்மித்தின் ஆட்டத்தை பற்றி வெகுவாக பாராட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் காட்டுக்கு சிங்கம் ஸ்மித்' என்று பதிவிட்டிருந்தார்.

இவரின் இந்த ட்விட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பிரபல கிரிக்கெட் வீர்ர்கள் பலரும் தோனிக்கு ஆதரவு தெரிவித்தனர். தோனி ரசிகர்கள் பலரும் ஹர்ஷ் கோயங்காவின் கருத்துக்கு எதிராக அவரை குறிப்பிட்டு தொடர் பதிவுகளையிட்டனர்.

இந்த நிலையில் நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த மும்பை - புனே அணிகளுக்கிடையான போட்டியில் 20 ரன்கள் வித்தியாசத்தில் புனே அணி வெற்றி பெற்று முதல் முறையாக ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

இந்தப் போட்டியில் தோனி 26 பந்துகளில் 5 சிக்சர்களுடன் 40 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். இந்தப் போட்டியில் தோனியின் அதிரடி ஆட்டம் வெளிப்பட்டதால் வான்கடே மைதானம் முழுவதும் ஆரவாரத்துடன் தோனியுடன் பெயரை உச்சரித்துக் கொண்டிருந்தனர். அப்போது தோனி அடித்த சிக்ஸருக்கு புனே அணியின் உரிமையாளர் ஹர்ஷ் கோயங்கா எழுந்து நின்று கைதட்டி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். தற்போது அப்புகைபடம்தான் சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

ஹர்ஷ் கோயங்காவும் அப்புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு தோனியின் அதிரடி என்று பதிவிட்டுள்ளார்.

இதற்கு கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் தற்போது யார் மைதானத்துக்கு சிங்கம் என்ற ஹர்ஷ் கோயங்கா தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டிருப்பார் என்று நம்புகிறோம் என்று அவரது பதிவில் பதிவிட்டு வருகின்றனர்.

புனே அணி உரிமையாளர் ஹர்ஷ் கோயங்காவின் ட்வீட்டர் பதிவு

SCROLL FOR NEXT