விளையாட்டு

ஆஸ்திரேலிய அணி தீவிர பயிற்சி

பிடிஐ

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரர்கள் நேற்று மும்பை பிராபோர்ன் மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.

4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. கடந்த இருதினங்களுக்கு முன்பு மும்பை வந்தடைந்த அந்த அணி வீரர்கள் நேற்று பயிற்சியில் ஈடுபட்டனர்.

டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித், கிளென் மேக்ஸ்வெல், உஸ்மான் கவாஜா ஆகியோர் நீண்ட நேரம் வலையில் பேட்டிங் செய்தனர். முக்கியமாக சுழற் பந்துகளை அதிக அளவில் சந்தித் தனர். அவ்வப்போது தரன் ராமிடம் இருந்து ஆலோச னைகளை பெற்றுக்கொண்டனர்.

மேலும் ரன் சேர்க்க ஓடுவதில் கூடுதல் கவனம் செலுத்தும் விதமாக அதற்கான பயிற்சி களையும் பேட்ஸ்மேன்கள் மேற் கொண்டனர். சில வீரர்கள் சிலிப் திசையில் கேட்ச் செய்வது தொடர் பான பயிற்சியில் ஈடுபட்டனர்.

சொந்த மண்ணில் 19 டெஸ்ட் போட்டிகளில் தோல்விகளை சந்திக்காமல் உள்ள விராட் கோலியின் தலைமையிலான இந்திய அணிக்கு எதிராக வலுவான ஆட்டத்தை கொடுக்கும் முயற்சியாக ஆஸ்திரேலிய அணி வீரர்கள் நீண்ட நேரம் பயிற்சியில் செலவிட்டனர்.

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்தி ரேலிய அணி வரும் 23-ம் தேதி மோதுகிறது. இந்த ஆட்டம் புனே வில் நடைபெறுகிறது. முன்னதாக ஆஸ்திரேலிய அணி இந்தியா ஏ அணிக்கு எதிராக 3 நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது. இந்த ஆட்டம் பிராபோர்ன் மைதானத்தில் நாளை தொடங்குகிறது.

SCROLL FOR NEXT