விளையாட்டு

பாட்மிண்டன்: சிந்து, ஸ்ரீகாந்த் சாம்பியன்

செய்திப்பிரிவு

புது டெல்லியில் நடைபெற்ற 78-வது சீனியர் தேசிய பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிர் பிரிவில் பி.வி. சிந்துவும், ஆண்கள் பிரிவில் கே.ஸ்ரீகாந்த்தும் சாம்பியன் பட்டம் வென்றனர். 2011-ம் ஆண்டுக்குப் பின் சிந்து வெல்லும் இரண்டாவது தேசிய பட்டம் இது. உலக சாம்பியன்ஷிப் போட்டியில் சிந்து வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கலப்பு இரட்டையர் பிரிவில் நடப்பு சாம்பியன்கள் அபர்ணா பாலன், அருண் விஷ்ணு ஜோடி பட்டத்தை தக்கவைத்துக் கொண்டது. பெண்கள் இரட்டையர் பிரிவில் ஜுவாலா கட்டா, அஸ்வின் பொண்ணப்பா ஜோடி பட்டம் வென்றது. 2009-க்குப் பின் இந்த ஜோடி இப்போது மீண்டும் பட்டத்தை வென்றுள்ளது. ஆண்கள் இரட்டையர் பிரிவில் பிரணாய் ஜெர்ரி சோப்ரா, அக்ஷய் திவால்கர் ஜோடி பட்டம் வென்றது.

SCROLL FOR NEXT