விளையாட்டு

2026 ஐபிஎல் சீசன் தோனிக்கு கடைசி: இர்ஃபான் பதான் ‘லாஜிக்’

செய்திப்பிரிவு

மும்பை: ஐபிஎல் 2026-ம் ஆண்டு சீசன் போட்​டிகள் வரும் 28-ம் தேதி பெங்​களூரு​வில் கோலாகல​மாக தொடங்​கு​கிறது. சென்னை சூப்​பர் கிங்ஸ் அணி 6-வது முறை​யாக பட்​டம் வெல்​லும் முனைப்​புடன் களமிறங்க ஆயத்​த​மாகி வருகிறது. சஞ்சு சாம்​சனின் வருகை சிஎஸ்கே அணிக்கு கூடு​தல் பலம் சேர்க்​கக்​கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சீசனில் 44 வயதான தோனி அனைத்து ஆட்டங்களிலும் விளை​யாடு​வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சஞ்சு சாம்​சனின் வரு​கை​யால் இம்​முறை தோனி இம்​பாக்ட் பிளேயர் விதி​யின் கீழ் களமிறங்​கக்​கூடும் எனவும் கூறப்​படு​கிறது.

இந்​நிலையில் இந்​திய கிரிக்​கெட் அணி​யின் முன்னாள் வீர​ரான இஃர்​பான் பதான் ஜியோ ஸ்டார் நிகழ்ச்​சி​யில் கூறிய​தாவது: சிஎஸ்கே அணி​யில் சஞ்சு சாம்​சனின் வருகை, கேப்​டன் ருது​ராஜ் கெய்க்​வாட் தனது ஆட்​டத்தை இன்​னும் சுதந்​திர​மாக வெளிப்​படுத்த உதவும். ஒரு கேப்டனாக ருது​ராஜ் வளர்ந்து வரு​வதை நாம் பார்த்​திருக்​கிறோம்.

          

எம்​.எஸ்​.தோனி உரு​வாக்கி உள்ள மாபெரும் பாரம்பரியத்தை சுமந்து​கொண்​டு, ஐபிஎல் போன்ற தொடரில் ஓர் அணியை வழிநடத்​து​வது என்​பது அவ்​வளவு எளி​தான காரி​யம் அல்ல. ஒரு வீரரின் வாழ்க்​கை​யில் அது மிகப்​பெரிய சவால்​களில் ஒன்​று. ஆனால் தோனி​யின் ஆதர​வும், சஞ்சு சாம்​சன் அளிக்​கும் உதவி​யும் ருது​ராஜுக்கு பலன் தரும்.

அணி​யின் வீரர்​களைப் பார்ப்​பதும், விளை​யாடும் லெவனை கற்பனை செய்து பார்ப்​பதும் முற்​றி​லும் வேறுபட்ட விஷ​யங்​கள். அனுபவம் வாய்ந்த வீரர்​களை நம்புவதே கடந்த காலங்​களில் சிஎஸ்​கே-​வின் வெற்றிக்கான தாரக மந்​திர​மாக இருந்​தது. ஆனால் இப்​போது, அவர்​கள் தங்​கள் அணுகு​முறையை மாற்​றி, அனுபவம் குறைந்த இளம் வீரர்​களை நோக்​கிச் செல்கிறார்​கள்.

அவர்​கள் எதிர்​காலத்​துக்​காக​வும் அணியை உரு​வாக்கி வரு​கிறார்​கள். டெவால்ட் பிரே​விஸ், ஊர்​வில் படேல், ஷிவம் துபே மற்​றும் சர்ஃப​ராஸ் கான் போன்ற உற்சாகமளிக்​கும் வீரர்​கள் அணி​யில் உள்​ளனர். இந்த சீசனில் அவர்​கள் தங்​கள் ஆட்​டத்தை எப்​படி வெளிப்​படுத்​துகிறார்​கள் என்​ப​தைப் பார்க்க நான் ஆவலாக இருக்கிறேன்.

தோனி இல்​லாமல் சிஎஸ்கே முழு​மையடை​யாது. மஞ்​சள் நிற உடை​யில் நாம் அவரைப் பார்க்​கும் கடைசி சீச​னாக இது இருக்​கலாம். தோனி இல்​லாத சிஎஸ்​கே-வை​யும் ஐபிஎல் தொடரை​யும் கற்​பனை செய்து பார்ப்​பது மிக​வும் கடினம். இந்த சீசனில், அனைவரை​யும் ஒன்​றிணைப்​ப​தில் தோனி ஒரு முக்​கியப் பங்​காற்று​வார்.

அவர் எத்​தனை போட்​டிகளில் விளை​யாடு​வார் என்று எனக்​குத் தெரிய​வில்​லை. ஆனால் ஓய்​வறை​யில் அவர் இருப்​பது வீரர்​களுக்​குப் பெரிதும் உதவும். சஞ்சு சாம்​சனும் இதன் மூலம் பயனடை​வார், ஏனெனில் அவரும் தலை​மைத்​து​வக் குழு​வின் ஒரு பகு​தி​யாக இருப்​பார். ருது​ராஜ் கெய்க்​வாட் தான் கேப்​டன். ஆனால் ஒரு குழு​வாக எப்போதும் இரண்டு அல்​லது மூன்று பேர் எதிர்காலத்துக்காகத் தயார் செய்​யப்​படு​கிறார்​கள்.

அந்த இடத்​தில்​தான் தோனி​யின் பங்​களிப்பு முக்கியத்துவம் பெறுகிறது. அவர், ஒரு மாற்​றத்தை ஏற்​படுத்​து​வார் என்று நான் நம்​பு​கிறேன். தோனி​யின் உடற்​தகு​தி, பேட்​டிங் வரிசை மற்​றும் அவர் அனைத்​துப் போட்டிகளி​லும் விளை​யாடு​வாரா என்​பது குறித்த கேள்விகள் எழக்​கூடும்.

சிஎஸ்கே அணி நிர்​வாகம் இதை ஒவ்​வொரு கட்​ட​மாகவே அணுகும். 6-வது முறை​யாக ஐபிஎல் கோப்​பையை வெல்​வதன் மூலம், அவருக்கு ஒரு மிகச்​சிறந்த விடை​பெறு​தலை வழங்​க அவர்​கள்​ நிச்​சய​மாக முயற்​சிப்​பார்​கள்​. இவ்​வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT