விளையாட்டு

புட்சால் தொடரில் டேவிட் பெக்காம்

பிடிஐ

பிரிமியர் புட்சால் கால்பந்து இந்தியாவில் முதன்முறையாக கடந்த ஏப்ரல் மாதம் நடத்தப் பட்டது. 6 அணிகள் கலந்துகொண்ட இந்த தொடரில் மும்பை அணி பட்டம் வென்றது. இந்த தொடரில் ரொனால் டின்கோ, ரேயன் கிக்ஸ், பால் ஸ்கோல்ஸ், ஹெர்மன் கிரஸ்போ, பால்கோ உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் பங்கேற்றனர்.

இந்நிலையில் 2-வது சீசன் புட்சால் போட்டி 2017-ம் ஆண்டின் முதல் கால் பகுதியில் நடத்தப்படும் என்றும் இதில் 8 அணிகள் கலந்து கொள்ளும், போட்டிகள் 4 நகரங்களில் நடை பெறும் என போட்டி அமைப்பின் நிர்வாக இயக்குநர் தினேஷ் ராஜ் நேற்று மும்பையில் தெரிவித்தார். இந்த சீசனில் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் டேவிட் பெக்காம், பிரேசில் வீரர் ககா ஆகியோரை பங்கேற்க செய்ய பேச்சுவார்த்தைகள் நடை பெற்று வருகிறது. இதில் நல்ல முன்னேற்றமும் கிடைத்துள் ளதாகவும் தினேஷ் ராஜ் கூறினார்.

SCROLL FOR NEXT