விளையாட்டு

நியூஸிலாந்து கிரிக்கெட் தொடர்: இந்திய அணி இன்று தேர்வு

பிடிஐ

நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆடும் இந்திய அணி இன்று தேர்வு செய்யப்படுகிறது.

இந்தியா - நியூஸிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் வரும் 22-ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் ஆடும் இந்திய வீரர்களை தேர்வு செய்வதற்கான கூட்டம் தேர்வுக்குழு தலைவர் சந்தீப் பாட்டீல் தலைமையில் மும்பையில் இன்று நடக்கிறது.

ஒருநாள் கிரிக்கெட் போட்டி களில் சிறப்பாக ஆடினாலும், டெஸ்ட் போட்டிகளில் ரோஹித் சர்மாவின் ஆட்டம் சொதப்பலாக உள்ளது. மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக சமீபத்தில் நடந்த டெஸ்ட் தொடரில் அவர் சிறப்பாக ஆடவில்லை. மேலும் தற்போது நடந்து வரும் துலீப் கோப்பைக்கான கிரிக்கெட் தொட ரிலும் அவரது பேட்டிங் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. அதனால் நியூஸிலாந்துக்கு எதிரான தொடரில் அவர் சேர்க்கப் படுவது சந்தேகம் என்று கூறப்படுகிறது. இருப்பினும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக ஆடும் ரோஹித் சர்மாவுக்கு, டெஸ்ட் அணியில் இன்னும் சில காலம் வாய்ப்பளிக்க வேண்டும் என்று கேப்டன் கோலி பரிந்துரைப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ரோஹித் சர்மாவுக்கு இந்திய அணியில் இடம் கிடைக்குமா என்பது இன்றைய கூட்டத்தில் தெரிந்துவிடும்.

ரோஹித் சர்மாவுக்கு இடம் கிடைக்காத பட்சத்தில் ஸ்ரேயாஸ் ஐயர், மணிஷ் பாண்டே, கருண் நாயர் ஆகியோரில் யாரேனும் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கலாம். துலீப் கோப்பைக்கான கிரிக்கெட் தொடரில் அடுத்தடுத்து 2 சதங்களை அடித்ததால் புஜாராவுக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பந்துவீச்சாளர்களில் இஷாந்த் சர்மா, முகமது ஷமி, அஸ்வின் ஆகியோருக்கு நிச்சயம் அணியில் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT