தென் ஆப்பிரிக்க அணி ஒரு டி 20 ஆட்டம், 5 ஒருநாள் போட்டி, 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக நியூஸிலாந்து சென்றுள்ளது. டி 20 ஆட்டம் வரும் 17-ம் தேதி ஆக்லாந்தில் நடைபெறுகிறது. இதை தொடர்ந்து ஒருநாள் போட்டி தொடர் 19-ம் தேதி தொடங்குகிறது.
இந்த தொடரின் 4-வது ஆட்டத்தை மார்ச் 1-ம் தேதி நேப்பியரில் நடத்த திட்டமிடப்பட்டி ருந்தது. இந்நிலையில் இந்த ஆட்டம் தற்போது ஹாமில்டன் நகருக்கு மாற்றப்பட்டுள்ளது. இதற்கு காரணம் மைதானத்தில் சரியான வடிகால் வசதி இல்லாததுதான் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் இங்கு நடைபெற இருந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டி மழை காரணமாக ஒரு பந்துகூட வீசப்படாமல் ரத்து செய்யப் பட்டிருந்தது. மழை ஓய்ந்து சுமார் 6 மணி நேரத்துக்கு பிறகும் மைதானத்தின் ஈரத்தன்மையை உலர வைக்க முடியாமல் போனது. மேலும் கடந்த 4 ஆண்டுகளில் நேப்பியரில் மழை காரணமாக ரத்து செய்யப்படும் 3-வது ஆட்டமாகவும் இது அமைந்தது.