விளையாட்டு

கனடா பாட்மிண்டன் 3-வது சுற்றில் இந்திய வீரர்கள்

செய்திப்பிரிவு

கனடா ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர்கள் பிரணாய், அஜெய் ஜெயராம், குருசாய்தத் ஆகியோர் 3-வது சுற்றுக்கு முன்னேறினர்.

கால்கரி நகரில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றில் ஜெயராம், 17-21, 21-17, 21-13 என்ற செட் கணக்கில் கனடாவின் மார்ட்டினை வீழ்த் தினார். இந்த ஆட்டம் 54 நிமி டங்கள் நடைபெற்றது.

மற்றொரு ஆட்டத்தில் பிரணாய் 13-21, 21-11, 21-15 என்ற செட் கணக்கில் சுவீட னின் மத்தியாஸ் போர்க்கை தோற்கடித்தார். குருசாய் தத்தும் 3-வது சுற்றுக்கு முன்னேறி உள்ளார். அவர் தனது 2-வது சுற்றில் கனடாவின் ஜோனாதன் லாயை 21-8, 21-6 என்ற நேர் செட்டில் எளிதாக வீழ்த்தினார்.

SCROLL FOR NEXT