இந்தியாவில் டெஸ்ட் தொடரில் பங்கேற்க பயணிக்கும் நியூஸிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் ஆல் ரவுண்டர் ஜேம்ஸ் நீஷம் சேர்க்கப்பட்டுள்ளார்.
நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி செப்டம்பர் 22-ம் தேதி கான்பூரில் தொடங்குகிறது, இதனையடுத்து கொல்கத்தா, இந்தூர் ஆகிய நகரங்களில் டெஸ்ட் போட்டிகள் நடைபெறுகிறது.
கடந்த நவம்பரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பிரிஸ்பன் மைதானத்தில் கடைசியாக டெஸ்டில் ஆடிய ஜேம்ஸ் நீஷம் மீண்டும் தன்னை நிரூபிக்க வாய்ப்பு பெற்றுள்ளார்.
நியூஸிலாந்து டெஸ்ட் அணி:
கேன் வில்லியம்சன் (கேப்டன்), டிரெண்ட் போல்ட், டக் பிரேஸ்வெல், மார்க் கிரெய்க், மார்டின் கப்தில், டாம் லாதம், ஜேம்ஸ் நீஷம், ஹென்றி நிகோல்ஸ், லூக் ரோங்கி, மிட்செல் சாண்ட்னர், இஷ் சோதி, டிம் சவுதீ, ராஸ் டெய்லர், நீல் வாக்னர், பி.ஜே.வாட்லிங்.