விளையாட்டு

அஸ்லான் ஷா கோப்பை: இந்தியா பங்கேற்காது

செய்திப்பிரிவு

மலேசியாவில் நடைபெறவுள்ள சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கிப் போட்டியில் இந்திய அணி பங்கேற்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹாக்கி இந்தியா செயலர் நரீந்தர் பத்ரா கூறுகையில், “உலகக் கோப்பையை மனதில் கொண்டு அதற்காக சிறப்பாக தயாராக வேண்டியிருப்பதால் அஸ்லான் ஷா கோப்பை போட்டியில் இந்தியாவை விளையாட வைப்பதில்லை என அணியின் உயர் செயல்பாடு இயக்குநர் ரோலன்ட் ஓல்ட்மான்ஸ், தலைமைப் பயிற்சியாளர் டெர்ரி வால்ஷ் ஆகியோர் முடிவு செய்துள்ளனர்” என்றார்.

SCROLL FOR NEXT