சர்வதேச பாட்மிண்டன் கூட்டமைப்பு நேற்று வெளியிட்ட தரவரிசைப் பட்டியலில் இந்திய வீராங்கனை சாய்னா நெவால் 2- இடங்கள் பின்தங்கி 8-வது இடத்துக்கு வந்துள்ளார்.
சமீபகாலமாக சாய்னா நெவால் போட்டிகளில் சரியாக விளையாடாததே இந்த பின்னடைவுக்கு முக்கியக் காரணம்.மற்றொரு இந்திய வீராங்கனை பி.வி. சிந்து தொடர்ந்து 11வது இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார்.
ஆண்கள் தரவரிசையில் காஷ்யப் தொடர்ந்து 14வது இடத்தில் உள்ளார். அஜய் ஜெயராம் ஓரிடம் முன்னேறி 24வது இடத்தைப் பிடித்துள்ளார்.