விளையாட்டு

தேசிய ஹேண்ட்பால் பயிற்சியாளர் முகாம்

செய்திப்பிரிவு

தமிழக ஹேண்ட்பால் சங்கத்தின் சார்பில் ஹேண்ட்பால் நடுவர்களுக்கான தேசிய பயிற்சி முகாம் மற்றும் தேர்வு வரும் 16-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை கோயம்புத்தூர் குமரகுரு தொழில்நுட்ப கல்லூரியில் நடைபெறுகிறது.

பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஸ்போர்ட்ஸ் மையத்தின் தலைமைப் பயிற்சியாளர் மொஹிதர் பால், டெல்லியைச் சேர்ந்த தேசிய ஹேண்ட்பால் பயிற்சியாளர் சிவாஜி சாந்து உள்ளிட்டோர் இந்த முகாமில் கலந்து கொண்டு பயிற்சி அளிக்கிறார்கள். இந்தியா முழுவதிலும் இருந்து ஏராளமான நடுவர்கள் பங்கேற்கிறார்கள்.

தமிழகத்தைச் சேர்ந்த ஹேண்ட்பால் நடுவர்களும் இதில் பங்கேற்கலாம். இதில் பங்கேற்க முன்பதிவு செய்ய வேண்டும். இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு தமிழக ஹேண்ட்பால் சங்க செயலர் சரவணனை 9962523422 என்ற எண்ணிலோ அல்லது tnhandballsecry@gmail.com என்ற இணையதள முகவரியிலோ தொடர்பு கொள்ளலாம்.

SCROLL FOR NEXT