விளையாட்டு

மே.இ.தீவுகள் தொடருக்கான இந்திய அணியில் ரிஷப் பந்த், குல்தீப் யாதவ்: ரோஹித் சர்மா, பும்ரா இல்லை

இரா.முத்துக்குமார்

மே.இ.தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது, இதில் அதிரடி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மென் ரிஷப் பந்த் மற்றும் இடது கை ரிஸ்ட் ஸ்பின்னர் குல்தீப் யாதவ் இடம்பெற்றுள்ளனர்.

ஆனால் ரோஹித் சர்மா, பும்ரா இந்த அணியில் இடம்பெறவில்லை. ரோஹித் சர்மா, பும்ரா ஏன் தேர்வு செய்யப்படவில்லை என்பதற்கான காரணங்களை அணித்தேர்வுக்குழு தெரிவிக்கவில்லை. தினேஷ் கார்த்திக் அணியில் இடம்பெற்றுள்ளார். அஸ்வின், ஜடேஜா ஆகியோரும் உள்ளனர். புவனேஷ், ஷமி, உமேஷ் யாதவ் இருக்கின்றனர். அஜிங்கிய ரஹானே இடம்பெற்றுள்ளார். தோனி விக்கெட் கீப்பராக செயல்படுவார்.

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி மே.இ.தீவுகளில் 5 ஒருநாள் போட்டிகள் ஒரேயொரு டி20யில் ஆடுகின்றனர். அனில் கும்ப்ளே பயிற்சியாளராக நீடிப்பார் என்றே தெரிகிறது.

அணி விவரம் வருமாறு:

விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவண், ரிஷப் பந்த், அஜிங்கிய ரஹானே, தோனி, யுவராஜ் சிங், கேதார் ஜாதவ், ஹர்திக் பாண்டியா, அஸ்வின், ஜடேஜா, ஷமி, உமேஷ் யாதவ், புவனேஷ் குமார், குல்தீப் யாதவ், தினேஷ் கார்த்திக்.

SCROLL FOR NEXT