விளையாட்டு

சென்னை ஓபன்: யூகி, ஜீவனுக்கு வைல்ட்கார்ட்

செய்திப்பிரிவு

2014 ஏர்செல் சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில் பங்கேற்பதற்கு இந்திய வீரர்கள் யூகி பாம்ப்ரி, ஜீவன் நெடுஞ்செழியன் ஆகியோருக்கு வைல்ட்கார்ட் வழங்கப்பட்டுள்ளது.

தெற்காசியாவின் ஒரே ஏடிபி போட்டியான சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி வரும் திங்கள்கிழமை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்டிஏடி டென்னிஸ் மைதானத்தில் தொடங்குகிறது.

எஸ்தோனியாவின் ஜூர்கன் ஸாப் காயம் காரணமாக விலகியதைத் தொடர்ந்து இந்தியாவின் முன்னணி (சர்வதேச தரவரிசை 90) வீரரான சோம்தேவ் நேரடித் தகுதி பெற்றார். இந்த நிலையில் யூகி பாம்ப்ரி, ஜீவன் நெடுஞ்செழியன் ஆகியோருக்கு வைல்ட்கார்ட் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஒற்றையர் பிரிவில் பங்கேற்கவுள்ள இந்தியர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல் பிரிட்டன் வீரர் கைல் எட்மன்டுக்கும் ஒற்றையர் பிரிவில் பங்கேற்க வைல்ட்கார்ட் வழங்கப்பட்டுள்ளது.

ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ராம் பாலாஜி-ராம்குமார் ராமநாதன், இந்தியாவின் சாகேத் மைனேனி-ரஷியாவின் கரேன் கச்சனோவ் ஆகிய ஜோடிகளுக்கு வைல்ட்கார்ட் வழங்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT