விளையாட்டு

ஐபிஎல் கிரிக்கெட்டில் தெ.ஆ. வீரர்கள் தொடர்ந்து ஆட வேண்டுமெனில் தொடரை உறுதி செய்க: ஹரூன் லோர்கட் மிரட்டல்

இரா.முத்துக்குமார்

ஐபிஎல் கிரிக்கெட்டில் தொடர்ந்து தென் ஆப்பிரிக்க வீரர்கள் விளையாட வேண்டுமெனில் தென் ஆப்பிரிக்கா தொடரை பிசிசிஐ உறுதி செய்வது அவசியம் என்று தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் சங்கத் தலைவர் ஹரூண் லோர்கட் புதிய குண்டு ஒன்றைத் தூக்கிப் போட்டுள்ளார்.

டிசம்பர் 26-ம் தேதி பாக்சிங் டே டெஸ்ட் போட்டியுடன் தொடங்கும் தொடரை பிசிசிஐ உறுதி செய்ய வேண்டும் என்று லோர்கட் பிசிசிஐ சிஇஓ ராகுல் ஜோஹ்ரிக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் அதே கடிதத்தில் இந்திய அணி இந்தத் தொடரில் ஆடினால் மட்டுமே ஐபிஎல் தொடரில் தென் ஆப்பிரிக்க வீரர்கள் விளையாட அனுமதிக்கப்படுவார்கள் என்பதையும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஜோஹ்ரி கூறும்போது, “இதற்கெல்லாம் பதிலளிக்கக் கூட நான் பரிசீலிக்கவில்லை. நேரம் வரும்போது அவர்களுக்கு முடிவு தெரிவிக்கப்படும்” என்று அவர் ஆங்கில ஊடகம் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT