விளையாட்டு

அணியில் மாற்றமில்லை: இந்தியா டாஸ் வென்று முதலில் பீல்டிங் தேர்வு

செய்திப்பிரிவு

எட்ஜ்பாஸ்டனில் தொடங்கும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் அரையிறுதியில் வங்கதேசத்துக்கு எதிராக டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்தார்.

இந்திய, வங்கதேச அணிகளில் மாற்றமில்லை.

விராட் கோலி டாஸ் பற்றி கூறிய போது, “இது புதிய பிட்ச் போல் தெரிகிறது, எனவே ஆட்டம் முழுதும் மாறாமல் இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன், கொஞ்சம் மேகமூட்டமாக இருப்பதால் பந்து வீச்சு எடுபடும் அதனால் பீல்டிங்கைத் தேர்வு செய்கிறேன்” என்றார்.

வங்கதேச கேப்டன் மஷ்ரபே மோர்டசாவும், டாஸ் வென்றிருந்தால் முதலில் பவுலிங்கையே தேர்வு செய்திருப்போம் என்றார்.

SCROLL FOR NEXT