விளையாட்டு

மும்பை மைதானத்தில் 200வது டெஸ்ட்: இது சச்சின் சாய்ஸ்

செய்திப்பிரிவு

நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது 200வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை மும்பை வான்கடே மைதானத்தில் விளையாடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 200-வது டெஸ்ட் போட்டியை விளையாடிவிட்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப்போவதாக மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் சமீபத்தில் அறிவித்தார்.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டி அடுத்த மாதம் நடைபெற இருக்கிறது. இதற்கிடையில், தனது 200வது டெஸ்ட் போட்டியை சொந்த மண்ணில் விளையாட விரும்புவதாக சச்சின் டெண்டுல்கர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், சச்சின் டெண்டுல்கர் விரும்பியவாரே, வான்கடே மைதானத்தில் 200வது டெஸ்ட் போட்டியை, விளையாடுவதற்கு ஏதுவாக போட்டி நடைபெறும் இடத்தை மும்பைக்கு மாற்றியுள்ளது பி.சி.சி.ஐ. சச்சினுக்கு பிரமாண்ட பிரிவு உபச்சார விழா நடத்த பி.சி.சி.ஐ. திட்டமிட்டிருப்பதாகவும் தெரிகிறது.

SCROLL FOR NEXT