மலேசிய கிராண்ட்ப்ரீ கோல்டு பாட் மிண்டன் போட்டியில் இந்தியாவின் சௌரப் வர்மா அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். அதேநேரத்தில் இந்தியாவின் குருசாய் தத், பி.சி.துளசி ஆகியோர் காலிறுதியில் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினர்.
மலேசியாவின் ஜோகார் பாரு நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற காலிறுதி யில் போட்டித் தரவரிசையில் 8-வது இடத்தில் உள்ள சௌரப் வர்மா 22-20, 18-21, 21-15 என்ற செட் கணக்கில் சீன தைபேவின் டியன் சென் சௌவைத் தோற்கடித்து அரையிறுதியை உறுதி செய்தார்.
மற்ற காலிறுதி ஆட்டங்களில் குரு சாய் தத் 12-21, 21-15, 19-21 என்ற செட் கணக்கில் மலேசியாவின் ஃபெங் சாங்கிடமும், பி.சி.துளசி 17-21, 21-18, 18-21 என்ற செட் கணக்கில் இந் தோனேசியாவின் அட்ரியான்டி ஃபிர்ட ஸாரியிடமும் தோல்வி கண்டனர்.-பிடிஐ