சிந்துவின் தந்தை பி.வி.ரமணா. முன்னாள் கைப்பந்து சர்வதேச வீரர். தாய் விஜயாவும் கைப்பந்து வீராங்கனைதான். ரமணா தென் மத்திய ரயில் வேயில் விளையாட்டு அதிகாரியாக பணியாற்றி வருகிறார். சிந்து வெள்ளிப் பதக்கம் வென்றது குறித்து ரமணா கூறும்போது,
இறுதி ஆட்டத்தில் சிந்து செய்த தவறுகளில் இருந்து பாடம் கற்று டோக்கியோ ஒலிம்பிக்கில் கண்டிப் பாக தங்கம் வெல்வார். தனது முதல் ஒலிம்பிக் போட்டியிலேயே சிந்து பதக்கம் வென்றதே பெருமை அளிக்கிறது. தங்கப்பதக்கத்தை கைப்பற்றிய கரோலின் மரின் அதற்கு தகுதியானவர்" என்றார்.