ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் சவால் நிறைந்தது என இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்தார்.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரும் ஜூன் 1-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை இங்கிலாந்தில் நடைபெற உள்ளது. இதில் நடப்பு சாம்பியனான இந்தியா உள்ளிட்ட 8 அணிகள் கலந்து கொள்கின்றன. இவை இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
ஏ பிரிவில் ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, இங்கிலாந்து, வங்கதேச அணிகளும், பி பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா, இலங்கை அணிகளும் இடம் பெற்றுள்ளன.
இந்த தொடரில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் பரம வைரியான பாகிஸ்தானை 4-ம் தேதி எதிர்த்து விளையாடுகிறது. 8-ம் தேதி இலங்கையையும், 11-ம் தேதி தென் ஆப்பிரிக்காவையும் இந்திய அணி சந்திக்கிறது.
முன்னதாக இந்திய அணி இரு பயிற்சி ஆட்டங்களில் விளையாட உள்ளது. முதல் பயிற்சி ஆட்டத்தில் நாளை நியூஸிலாந்துடனும், 2-வது பயிற்சி ஆட்டத்தில் 30-ம் தேதி வங்கதேசத்துடன் இந்திய அணி விளையாட உள்ளது. இந்நிலையில் லண்டனில் நடைபெற்ற நிருபர் களின் சந்திப்பில் இந்திய அணி யின் கேப்டன் விராட் கோலி கூறியதாவது:
கடந்த 4 வருடங்களுக்கு முன்பு இங்கு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நாங்கள் பட்டம் வென்றோம். அப்போது நாங்கள் இளம் வீரர்களை உள்ளடக்கிய அணியாக இருந்தோம். தற்போது சரியான அணியாக பொருந்தி உள்ளதோடு அதிக அளவில் முதிர்ச்சியும் அடைந்துள் ளோம்.
கடந்த 4 ஆண்டுகளில் நாங்கள் அதிக அளவிலான அனுபவங்களை பெற்றுள்ளோம். இதனால் சிறப்பான முறையில் இம்முறை இந்த தொடரை அணுகு கிறோம். சாம்பியன்ஸ் டிராபி தொடரை நான் மிகவும் நேசிக் கிறேன். ஏனேனில் சவாலை குறிப்ப தாகவே இது அமைந்துள்ளது.
உலகக் கோப்பை தொடரில் அதிக அளவிலான லீக் ஆட்டங்கள் இருக்கும். ஆனால் இங்கு குழு ஆட்டங்களே உள்ளது. அரை இறுதிக்கு முன்னேற வேண்டும் அல்லது வெளியேற வேண்டும். பின் நடுவரிசை பேட்டிங் பலவீனமாக இருந்ததாலேயே தோனிக்கு கடந்த இரு வருடங்கள் அதிகமாக சுமை ஏற்பட்டது.
அவருடன் இணைந்து ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்து கொடுக்க பின் நடுவரிசையில் வலுவான வீரர்கள் இல்லை. இதனால் தோனி தன்னை பேட்டிங் கில் சுதந்திரமாக வெளிப்படுத்திக் கொள்ள முடியவில்லை. ஆனால் தற்போது நாங்கள் சமபலம் அடைந் துள்ளோம். நீங்கள் உலகின் சிறந்த அணியாக இருக்கலாம். ஆனால் களத்தில் சிறப்பாக செயல் படாவிட்டால் திறமைக்கு எந்த மதிப்பும் இல்லை. இதுபோன்ற தொடர்களில் போட்டியின் தினத் தன்று எப்படி செயல்படுகிறோம் என்பதில்தான் அனைத்தும் அடங்கி இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.