விளையாட்டு

சாய் பிரணீத் சாம்பியன்

செய்திப்பிரிவு

தாய்லாந்து கிராண்ட் பிரிக்ஸ் கோல்டு பாட்மிண்டன் ஓபன் ஆடவர் பிரிவில் இந்தியாவின் சாய் பிரணீத் சாம்பியன் பட்டம் வென்றார்.

பாங்காக் நகரில் நடைபெற்ற இந்த தொடரில் போட்டி தரவரிசையில் 3-ம் நிலை வீரரான சாய் பிரணீத் இறுதிப் போட்டியில் 17-21, 21-18, 21-19 என்ற செட் கணக்கில் 4-ம் நிலை வீரரான இந்தோனேஷியாவின் ஜோனாதன் கிறிஸ்டியை வீழ்த்தி பட்டம் வென்றார்.

இந்த ஆட்டம் ஒரு மணி நேரம் 11 நிமிடங்கள் நடைபெற்றது. கிராண்ட் பிரிக்ஸ் தொடரில் சாய் பிரணீத் வெல்லும் முதல் பட்டம் இதுவாகும். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிங்கப்பூர் ஓபனிலும் சாய் பிரணீத் கோப்பை வென்றிருந்தார்.

SCROLL FOR NEXT