ஆஸ்திரேலிய ஸ்பின் லெஜண்ட் ஷேன் வார்ன், இந்திய முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியிடம் பந்தயத்தில் தோற்றார்.
இதனையடுத்து இங்கிலாந்து அணியின் சட்டையை ஒருநாள் முழுதும் அணிந்து கொள்ளப் போவதாக ஷேன் வார்ன் ட்விட்டரில் அறிவித்துள்ளார்.
லண்டனில் நடந்த ஒரு விவாதத்தின் போது மைக்கேல் கிளார்க், சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் என்று எதிர்பார்ப்பதாக கூறினார்.
ஆனால் கங்குலி இதனை ஏற்கவில்லை, இங்கிலாந்து அருமையான அணி, அந்த அணி நிச்சயம் இறுதிக்கு முன்னேறும் என்றார்.
அப்போது இந்த உரையாடல் இடையில் புகுந்த ஷேன் வார்ன், குரூப் ஏ போட்டியில் கூட இங்கிலாந்து ஆஸ்திரேலியாவை வெல்லாது. அப்போதுதான் கங்குலி பந்தயம் கட்டினார். அன்று ஆஸ்திரேலியாவை இங்கிலாந்து பெரிய அளவில் வீழ்த்தியது.
இதனையடுத்து பந்தயத்தில் தோற்றதாக ஒப்புக் கொண்ட ஷேன் வார்ன், “நண்பரே நீங்கள் பந்தயத்தில் வெற்றி பெற்றீர்கள். நான் இங்கிலாந்து ஒருநாள் போட்டி சட்டையை ஒருநாள் முழுக்க அணிந்து கொள்கிறேன்” என்று ட்வீட் செய்துள்ளார்.