விளையாட்டு

இலங்கைக்கு எதிரான தொடர்: காயத்தினால் ஷமி விலகல்

செய்திப்பிரிவு

இலங்கைக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மொகமது ஷமி விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

காயம் காரணமாக ஷமியால் விளையாட முடியாத நிலை ஏற்பட்டதால் மும்பை வேகப்பந்து வீச்சாளர் தவால் குல்கர்னி சேர்க்கப்பட்டுள்ளார்.

மொகமது ஷமியின் காயம் பற்றிய விவரங்கள் பிசிசிஐ செய்திக் குறிப்பில் வெளியிடப்படவில்லை.

மும்பையைச் சேர்ந்த தவால் குல்கர்னி ஒரேயொரு ஒருநாள் சர்வதேச போட்டியில் மட்டும் இதுவரை விளையாடியுள்ளார். தொடர்ந்து உள்நாட்டு கிரிக்கெட்டில் அபாரமாக பந்து வீசி வருவதால் அவருக்கு இன்னுமொரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி நவம்பர் 2-ஆம் தேதி கட்டாக்கில் நடைபெறுகிறது.

SCROLL FOR NEXT