விளையாட்டு

மெக்கல்லமின் சிறந்த அணியில் ஒரே இந்திய வீரர் சச்சின்; விவ் ரிச்சர்ட்ஸ் கேப்டன்

ஐஏஎன்எஸ்

மெக்கல்லம் தனக்குப் பிடித்த ஆல்டைம் கிரிக்கெட் லெவன் அணியை அறிவித்துள்ளார், இந்த அணியில் இடம்பெற்றுள்ள ஒரே இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கர் மட்டுமே.

இந்த அணிக்கு மே.இ.தீவுகள் முன்னாள் கிரேட் விவ் ரிச்சர்ட்ஸ் கேப்டன். 4 ஆஸ்திரேலிய வீரர்கள், 3 மே.இ.தீவுகள் வீரர்கள், 2 நியூஸிலாந்து வீரர்கள், பிறகு டெண்டுல்கர், காலிஸ்.

மார்ட்டின் குரோவ் என்ற பேட்டிங் கலைஞனை ஏனோ பிரெண்டன் மெக்கல்லம் தேர்ந்தெடுக்கவில்லை. தொடக்க வீரராக கிறிஸ் கெய்ல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து அவர் கூறும்போது, “தொடக்கத்தில் அடித்து நொறுக்கும் வீரர் தேவை. இதற்கு கிறிஸ் கெய்லை விட சிறந்தவர் இல்லை. சச்சின் டெண்டுல்கர் நாட்கள் கணக்கில் பேட் செய்வார். பாண்டிங் அடுத்த பெரிய புள்ளிவிவரங்களுடன் கூடிய வீரர். தொடக்கத்தில் விக்கெட்டுகள் விழுந்தாலும் பாண்டிங் ஆட்டத்தை மேன்மேலும் நகர்த்திச் செல்வார்.

அடுத்ததாக பிரையன் லாரா, அதற்கு அடுத்த டவுனில் கேப்டன் விவ் ரிச்சர்ட்ஸ். பிறகு காலீஸ்,ஆடம் கில்கிறிஸ்ட், ” என்று கூறினார் மெக்கல்லம்.

மெக்கல்லமின் ஆல்டைம் கிரிக்கெட்டிங் லெவன் வருமாறு:

கிறிஸ் கெய்ல், சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பாண்டிங், பிரையன் லாரா, விவ் ரிச்சர்ட்ஸ் (கேப்டன்), ஜாக் காலீஸ், ஆடம் கில்கிறிஸ்ட், மிட்செல் ஜான்சன், ஷேன் வார்ன், டிம் சவுதி, டிரெண்ட் போல்ட்.

SCROLL FOR NEXT