டென்மார்க் ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிட்டன் போட்டி இன்று தொடங்குகிறது. இந்திய வீராங்கனை சாய்னா நேவால், முதல் சுற்று ஆட்டத்தில், பல்கேரிய வீராங்கனையான ஸ்டெஃபனி ஸ்டோவை எதிர்கொள்கிறார்.
அண்மையில் நடந்து முடிந்த இந்தியன் பேட்மிட்டன் லீக் போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார் சாய்னா நேவால். இந்தியன் பேட்மிட்டன் லீக் போட்டியில் சிறப்பாக விளையாடியதால், டென்மார்க்கில் தன் திறமையை முழுமையாக பயன்படுத்தி வெற்றி பெறுவேன் என்று சாய்னா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.